ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தம்பிக்காக இசையமைப்பாளராகும் இயக்குனர் மிஷ்கின்...!

தம்பிக்காக இசையமைப்பாளராகும் இயக்குனர் மிஷ்கின்...!

மிஷ்கின்

மிஷ்கின்

Mysskin: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிஷ்கினின் தம்பி தனது இரண்டாவது படத்தை தொடங்க இருக்கிறார். இதில்தான் மிஷ்கின் இசையமைப்பாளராக பங்களிப்பு செலுத்த உள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அதன்பிறகு நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். இப்போது தனது தம்பிக்காக இசையமைப்பாளராகவும் தீர்மானித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. ஓரளவு பெயரையும் லாபத்தையும் சம்பாதித்த திரைப்படம் இது. இதையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷாலை வைத்து தொடங்கினார். லண்டனில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு மிஷ்கின், விஷால் சண்டையில் வந்து முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து மிஷ்கின் விலக்கப்பட்டார். துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை நானே இயக்கி நடிக்க இருக்கிறேன் என அறிவித்தார் விஷால்.

இதனை தொடர்ந்து பிசாசு 2 படத்தை ஆரம்பித்தார் மிஷ்கின். படம் தற்போது முடிவடைந்துள்ளது. இதை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்க இருக்கிறார். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளிவர உள்ளது.

இதனிடையில் தனது தம்பி ஆதித்யாவுக்காக அவர் இயக்கும் படத்திற்கு இசை அமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் மிஷ்கின்.

ஆதித்யா, சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கியவர். அந்த படத்தை தம்பிக்காக எழுதி தயாரித்தவர் மிஷ்கின். ராம் பிரதான வேடத்தில் நடிக்க, மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். பிளாக் க்யூமர் திரைப்படமான அது க்யூமர் குறைவாகவும் பிளாக் அதிகமாகவும் ஆகி நஷ்டத்தை சந்தித்தது.

இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிஷ்கினின் தம்பி தனது இரண்டாவது படத்தை தொடங்க இருக்கிறார். இதில்தான் மிஷ்கின் இசையமைப்பாளராக பங்களிப்பு செலுத்த உள்ளார். படம் குறித்த பிற விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Director mysskin