Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மிஷ்கினின் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி

மிஷ்கினின் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

Vijay Sethupathi : மிஷ்கினும் விஜய் சேதுபதியும் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல சுவாரசியங்களுடன் விரைவில் வெளிவர உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிசாசு 2 திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்த மிஷ்கின் விஷாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி நடிப்பதாக அறிவித்தார். அதன் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்க உள்ளது.

துப்பறிவாளனில் இருந்து விலகிய மிஷ்கின் உடனடியாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சென்ற வருடம் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சிறிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். "என்ன எல்லாம் நடிக்க வைக்க மாட்டீர்களா?" என்று விஜய் சேதுபதி மிஷ்கினிடம் கேட்க, ஒரு சிறிய வேடத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார் மிஷ்கின்.

தானாகவே யானை சவாரி தேடி வரும்போது அம்பாரியில் ஏறமாட்டேன் என்று யாராவது சொல்வார்களா. அதே நிலையில்தான் மிஷ்கினும் இருக்கிறார் விஜய் சேதுபதியே தேடி வந்து வாய்ப்பு கேட்கும்போது அவரை சிறிய வேடத்தில் நடிக்க வைத்து வீணடிக்க வேண்டுமா என நினைத்தவர் இப்போது அவரை நாயகனாக்கி ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

பிசாசு 2 திரைப்படத்திற்கு அடுத்தப் படமாக இது தயாராகிறது. இந்தப் படத்தில் ரஹ்மான் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பது மிஷ்கினின் கணக்கு. இதற்காக அவரை மிஷ்கின் அணுக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  மிஷ்கினின் படங்களுக்கு இளையராஜாதான் முதல் சாய்ஸாக இருப்பார். அவர் மறுக்கும் போது வேறு இசையமைப்பாளரை தேடிச் செல்வது மிஷ்கினின் பழக்கம்.

பிசாசு படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். மிஷ்கினும் விஜய் சேதுபதியும் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல சுவாரசியங்களுடன் விரைவில் வெளிவர உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Mysskin, Vijaysethupathi