மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த இயக்குனர் மிஷ்கின் அவருக்கு மாலை அணிவித்து, கட்டித்தழுவி, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை கூறினார்.
மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் அப்படம் குறித்து பெருமையுடன் பல்வேறு விஷயங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்திருந்தார்.
இதுவரையான 100 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தத் திரைப்படம் தான் மிகச் சிறந்த திரைப்படம் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த இயக்குனர் மிஷ்கின் அவருக்கு மாலை அணிவித்து, கட்டித்தழுவி, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை கூறினார்.
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டியின் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார் மிஷ்கின்.
இதுபற்றி ஒரு குறிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடைசி விவசாயி தந்தை மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன்.
ஆரத் தழுவினேன். மிகச்சிறந்த படப்பை தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன்.
படத்தின் கதையின் நாயகனாக ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழுநாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.
மணிகண்டா உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் - அன்புடன் மிஷ்கின். இவ்வாறு அந்தப் பதிவில் மிஷ்கின் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.