மிஷ்கின் இசையுமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டெவில் என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்குகிறார்.
டெவில் திரைப்படத்தில் பூர்ணா - விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Happy to release the first poster of #Devil. @DirectorMysskin @Aathityaa3 @shamna_kkasim @vidaarth_actor @Thrigun_Aactor @karthikmuthu14 @EditorElayaraja @KerliAntony @shaima_aslam @prosathish #maruthiLtd #touch__screen #subhashreeRayaguru pic.twitter.com/SCKP12rQ2e
— Andrea Jeremiah (@andrea_jeremiah) December 14, 2022
இந்த நிலையில் படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு மிஷ்கின் இசையமைப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். டெவில் திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும் படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் திட்டமிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அடுத்த பிப்ரவரி மாதம் வரை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் டெவில் திரைப்படத்தை மார்ச் மாதம் வெளியிடலாம் என அவர் முடிவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mysskin