மிஷ்கின் தயாரிக்கும் பிதா... ஹீரோவாக நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

மிஷ்கின் தயாரிக்கும் பிதா படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

மிஷ்கின் தயாரிக்கும் பிதா... ஹீரோவாக நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்
பிதா படக்குழு
  • Share this:
மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்டோர் நடித்த சவரக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா. இவர் அடுத்ததாக பிதா என்ற படத்தை இயக்குகிறார். காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்தாக வேண்டும் என்று தீவிரமாக தேடும் தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் மதியழகன். பாக்ஸர் படத்தை தயாரிக்கும் இவர் அந்தப் படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் மற்றும் ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. இதில் மிஷ்கின், ஆதித்யா, மதியழகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் பிதா படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் மதியழகன் உடன் ராதாரவி, கலையரசன், அனு கீர்த்தி வாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading