துப்பறிவாளன்-2 : விஷால் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

துப்பறிவாளன்-2 :  விஷால் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் மிஸ்கின்
விஷால் | மிஷ்கின்
  • Share this:
மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் விஷால் நடித்து வந்த நிலையில் படத்திலிருந்து மிஸ்கின் பாதியில் விலகியதன் காரணத்தை விளக்கியுள்ளார்.

துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் 2ம் பாகத்தில் மீண்டும் விஷால் - மிஷ்கின் கைகோர்த்தனர். லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் விஷால் மிஸ்கின் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

துப்பறிவாளன்2 படப்பிடிப்பிலிருந்து பாதியில் மிஸ்கின் வெளியேறினர். இந்நிலையில் விஷால் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மிஷ்கின் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. கதை எழுத மட்டும் மிஸ்கின் லண்டனில் 35 லட்சம் செலவிட்டதாகவும் 13 கோடி வரை படப்பிடிப்புக்காக செலவழிக்கப்பட்ட நிலையில் திரைப்படத்திலிருந்து மிஷ்கின் பாதியில் விலகி உள்ளதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக வேறு எந்த தயாரிப்பாளரும் மிஷ்கினை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் விஷால் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் நடைபெற்ற  வெப்சீரிஸ் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மிஸ்கின் பேசி உள்ளார். கதை எழுதுவதற்காக லண்டனில் 7 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட்டதாகவும் 35 லட்சம் ரூபாய் செலவுக்கான  ஆதாரத்தை வெளியிட முடியுமா எனவும் விஷாலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஊதியம் குறித்த வாக்குவாதத்தின் போது தனது தாயாரை விஷால் இழிவாக பேசியதாகவும் இதனை தட்டிக்கேட்ட தனது தம்பியை விஷால் தாக்கியதாகவும் மிஸ்கின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய மிஸ்கின் விஷால் கேட்டுக்கொண்டதற்காக இந்த திரைப்படத்திற்கான தடையில்லா சான்றிதழை வழங்கினேன்.

இதுநாள் வரை தமிழகத்தில் விஷாலை தான் பாதுகாத்து வந்ததாகவும் இனி விஷாலிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார்.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading