ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மே மாதம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் வசனங்கள் ஏதுமின்றி காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணா மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Also read... காமெடிக்கு பஞ்சம் இல்லை... வெளியானது ’குலுகுலு’ படத்தின் டீசர்

இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பிசாசு-2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Andrea Jeremiah, Director mysskin, Entertainment