Home /News /entertainment /

மைனா நந்தினி பெரிய வீடு வாங்கிட்டாரா? - உண்மை என்ன

மைனா நந்தினி பெரிய வீடு வாங்கிட்டாரா? - உண்மை என்ன

மைனா நந்தினி

மைனா நந்தினி

Myna nandhini : மைனா விங்க்ஸ் யூ டியூப் சேனலில் நந்தினி வீடு ஷிஃப்ட் செய்யப் போகிறோம் என்று ஒரு பதிவிட்டிருந்தார். வீடு பால் காய்ச்சும் வீடியோவும் பதிவிட்டிருந்தார். எனவே மைனா வீடு வாங்கிவிட்டதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து நந்தினி தன் வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    சீரியல் பிரபலம் மைனா நந்தினியின் யூ டியூப் சேனல் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.  விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மைனா நந்தினி. தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நந்தினி  வெள்ளித்திரையில் பிஸியாகிவிட்டார். விஜய் டிவியின் முக்கிய டிவி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

    நந்தினி சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர் யோகேஷ்வரன். இவர் தற்போது விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்னும் சீரியலில் நடித்து வருகிறார். நந்தினி-யோகி தம்பதிக்கு துருவன் எனும் ஒரு வயது மகன் இருக்கிறார்.
    துருவன் பிறந்த  தெரியவில்லை, அவரின் அம்மா நந்தினி  வெள்ளித்திரை சின்னத்திரை என்று பிஸியாகிவிட்டார். பட வாய்ப்புகள் குவிகின்றன. யோகியும் யூ டியூப் சேனலில் பிஸியாக இருக்கிறார். யோகி-நந்தினி சேனலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர்.  நந்தினி-யோகேஷ்வரன் இணைந்து கலந்து கொண்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி அண்மையில் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் நந்தினி புதிதாக பெரிய வீடு வாங்கிவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.


    myna nandhini yogi
    மைனா நந்தினி - யோகேஷ்


    மைனா விங்க்ஸ் யூ டியூப் சேனலில் நந்தினி வீடு ஷிஃப்ட் செய்யப் போகிறோம் என்று ஒரு பதிவிட்டிருந்தார். வீடு பால் காய்ச்சும் வீடியோவும் பதிவிட்டிருந்தார். எனவே மைனா வீடு வாங்கிவிட்டதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

    இதுகுறித்து நந்தினி தன் வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தன் புது வீட்டையும் சுற்றி காட்டியுள்ளார்.

    ``இதுதான் எங்க புது வீடு. ரொம்ப பெரிய வீடு. ஆனா நாங்க சொந்தமா வாங்கின வீடு கிடையாது. வாடகை வீடு. எல்லாரும் நாங்க வீடு வாங்கிட்டதா சொல்றாங்க. உண்மையா இது வாடகை வீடுதான். நாங்க புது வீடு வங்க இன்னும் 20 வருஷம் ஆகும்.  யோகேஷ் ஆசைப்படி இந்த வீட்டின் ஹாலில் விலை உயர்ந்த ரெக்லைனர் வாங்கி போட்டிருக்கோம். இது யோகியின் சின்ன வயசு ஆசை. ’’ என்று வீடியோவில் பேசியிருக்கிறார் நந்தினி.

    இதற்கு முன்னர் நந்தினியும் யோகியும் அபார்ட்மெண்டில் குடியிருந்தனர். தற்போது 3 BHK கொண்ட தனி வீட்டில் குடியேறி உள்ளனர்.
    Published by:Aswini S
    First published:

    Tags: Nandhini Serial, Trending, Trending Videos, TV Serial, TV Serial Promos, Vijay tv

    அடுத்த செய்தி