ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் இந்த உலகில் சிறந்தவன் - எஸ்.ஏ.சந்திரசேகர்

பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் இந்த உலகில் சிறந்தவன் - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய்யுடனான உறவு குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்தியை மறுத்தார். அவர் உலகிலேயே சிறந்த மகன் என்றும் குறிப்பிட்டார்.

  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரையுலகில் புகழ் பெற்ற விஜய் தற்போது தனது தந்தையை மதிப்பதில்லை என்ற வதந்திகளை மறுத்த SAC, ”என் பையன் என்னை மதிக்கலைன்னு நான் எங்கயாச்சும் சொல்லிருக்கேனா? நான் ஒரு அனுபவம் வாய்ந்த மனிதன், என் வாழ்க்கையில் பல குடும்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன். எனது அனுபவங்களை மட்டுமே உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன்” என்றார்.

  இதற்கிடையே முன்பு  விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தைப் பார்த்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் எஸ்ஏசி. பீஸ்ட் விஜய்யின் ஸ்டார் பவரை மட்டுமே சுற்றியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ”அரபிக் குத்து விஜய்யின் தீவிர ரசிகனாக ரசித்தேன். ஆனால், அவரை மட்டுமே நம்பி படம் இருந்தது.

  துவங்குவதற்கு முன்பே பல கோடி சம்பாதித்த விஜய்யின் தளபதி 67?

  சர்வதேச தீவிரவாத அமைப்புகளை பற்றிய சீரியஸ் சப்ஜெக்ட் படம். திரைக்கதையில் மேஜிக் இருக்க வேண்டும். அது எங்கே? இயக்குனர் இராணுவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு RAW ஏஜெண்ட் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அது காணவில்லை" என்று அப்போது தெரிவித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Thalapathy vijay