ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுத்த படமும் அஜித்துடன் தான் - போனிக்கபூர்: இயக்குநர் யார் தெரியுமா?

அடுத்த படமும் அஜித்துடன் தான் - போனிக்கபூர்: இயக்குநர் யார் தெரியுமா?

போனி கபூர்

போனி கபூர்

இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள போனி கபூர், ஹெச்.வினோத்தின் திரைப்படங்கள் அவரை பற்றி பேசும் என்றும் தனது திரைப்படங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் போனி கபூர்  தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள  வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார். போனி கபூர், அஜித் குமார், ஹெச். வினோத் இணைந்துள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

  வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ‘தி இந்து’ ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித்குமாரின் அடித்த படத்தையும் தானே தயாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தையும் ஹெச். வினோத் இயக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள போனி கபூர், ஹெச்.வினோத்தின் திரைப்படங்கள் அவரை பற்றி பேசும் என்றும் தனது திரைப்படங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.

  அடுத்த சிவா ஆகும் ஹெச்.வினோத்

  இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா நடிகர் அஜித்தை வைத்து,  வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தொடச்சியாக இயக்கிருந்தார். தற்போது, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியவற்றை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்குவதன் மூலம் அஜித்தின் விருப்பமான இயக்குநர் பட்டியலில் ஹெச். வினோத்தும் இணைத்துள்ளார்.

  இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு!

  Published by:Murugesh M
  First published:

  Tags: Actor Ajith, Boney Kapoor