விஜய் சேதுபதிதான் பிடிக்கும் - ‘மிஸ் இந்தியா எலைட்’ பட்டம் வென்ற அபூர்வி சைனி

நடிப்பு, பாடல், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில் பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் ‘பேஸ் ஆஃப் பியூட்டி’ என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்து கொள்கிறார்.

news18
Updated: April 2, 2019, 5:51 PM IST
விஜய் சேதுபதிதான் பிடிக்கும் - ‘மிஸ் இந்தியா எலைட்’ பட்டம் வென்ற அபூர்வி சைனி
அபூர்வி சைனி
news18
Updated: April 2, 2019, 5:51 PM IST
விஜய் சேதுபதி தான் பிடிக்கும் என்று அபூர்வி சைனி கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அபூர்வி சைனி எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் பி.டெக் படித்து வருகிறார். மார்ச் 17-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இண்டர்நேஷனல் இந்தியா என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019 பட்டத்தை வென்றுள்ளார்.

21 வயதாகும் இவர் தனது 19-வது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்தார். ரிலையன்ஸ் ஜுவெல்ஸ் மிஸ் இந்தியா சென்னை உள்ளிட்டவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். இதைத்தவிர அவர் விளம்பர படங்களிலும், பேஷன் ஷோக்களிலும் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

நடிப்பு, பாடல், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில் பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் ‘பேஸ் ஆஃப் பியூட்டி’ என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்து கொள்கிறார்.

படிக்க: ’தெறி’ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்? - கூச்சத்துடன் மகேந்திரன் கொடுத்த விளக்கம்

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அபூர்வி சைனி, சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மலிந்து வருவதாகவும், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அதனை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அபூர்வியின் பெரிய கனவு வெள்ளித்திரையில் கால்பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான். தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா என்றும் கூறியுள்ளார்.

சினிமா 18: தளபதி 63 அப்டேட் - வீடியோஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...