என் ரசிகர்கள் என்னை கொல்லப்போகிறார்கள் - பிரபாஸ்

சாஹோ படத்தின் tடீசர், ட்ரெய்லர் என வரிகையாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

news18-tamil
Updated: August 11, 2019, 4:30 PM IST
என் ரசிகர்கள் என்னை கொல்லப்போகிறார்கள் - பிரபாஸ்
சாஹோ
news18-tamil
Updated: August 11, 2019, 4:30 PM IST
சாஹோ ரிலீஸ் ஆக 2 வருடம் எடுத்துக்கொண்டதால் ரசிகர்கள் என்னைக் கொல்லப்போகிறார்கள் என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ளா சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் நெயில் நிதின் முகேஷ், அருண் விஜய், சன்கி பாண்டே, லால், ஜாக்கி ஷராஃப், முரளி சர்மா, மந்திரா பேடி, எவ்லின் சர்மா, மஹேஷ் மன்ஞ்ரேக்கர், டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது சாஹோ திரைப்படம். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர், ட்ரெய்லர் என வரிகையாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.


இந்நிலையில் படம் குறித்து பேசிய நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி படத்திற்காக 4 வருடங்கள் எடுத்துக்கொண்டேன். இனி அதுபோன்று அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் சாஹோ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெற்றுள்ளதால் அதற்கான கால அவகாசம் தேவைப்பட்டது. ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மட்டும் ஒரு வருடம் உழைத்தோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பாகுபாலி படத்திற்கு பிறகு என்னுடைய அடுத்த படமான சாஹோ ரிலீஸ் ஆக 2 வருடம் எடுத்துக்கொண்டதால் ரசிகர்கள் என்னை கொல்லப்போகிறார்கள். இந்தப் படத்திற்காக இயக்குநர் சுஜீத் நிறைய உழைத்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் பிரபாஸ் கூறியுள்ளார்

Also watch

Loading...

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...