Home /News /entertainment /

என் மகள் நாட்டுக்காக பதக்கம் வென்றுள்ளார்; சித்தார்த் என்ன செய்தார்? சாய்னா தந்தை கேள்வி

என் மகள் நாட்டுக்காக பதக்கம் வென்றுள்ளார்; சித்தார்த் என்ன செய்தார்? சாய்னா தந்தை கேள்வி

ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு போராடுகிறார் என்பதை அறிந்திருப்பதால், பத்திரிகையாளர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களின் ஆதரவு சாய்னாவுக்கு உள்ளது - சாய்னா தந்தை

    என் மகள் இந்த நாட்டுக்காக பதக்கங்களை வென்றிருக்கிறார். நடிகர் சித்தார்த் என்ன செய்தார்? என்று சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சித்தார்த், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து பதிவிட்ட ட்வீட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் பெண் செயற்பாட்டாளர்களும், பிரபலங்களும், நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சாய்னாவின் தந்தையும் சித்தார்த்தை விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க : நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

    முன்னணி ஆங்கில ஊடகத்தில் இது குறித்து பேசியுள்ள ஹர்வீர் சிங் நேவால் (சாய்னாவின் தந்தை) தனது மகள் குறித்து இழிவான முறையில் பதிவிட்ட சித்தார்த்தை சாடினார்.

    பேட்மிண்டன் மைதானத்தில் சாய்னா இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ள நிலையில், நடிகர் சித்தார்த் நாட்டிற்காக என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பினார்.

    அவர் அளித்துள்ள பேட்டியில், ''என் மகள் குறித்து சித்தார்த் அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதை மோசமாக உணர்ந்தேன். அவர் நாட்டுக்கு என்ன செய்தார்? என் மகள் பதக்கங்களை வென்றுள்ளார், இந்தியாவிற்கு விருதுகளை கொண்டு வந்துள்ளார்.

    இந்தியா ஒரு சிறந்த சமூகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு போராடுகிறார் என்பதை அறிந்திருப்பதால், பத்திரிகையாளர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களின் ஆதரவு சாய்னாவுக்கு உள்ளது.'' என்றார்.

    இதையும் படிங்க  : அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!

    தேசிய மகளிர் ஆணைய (NCW ) தலைவர் ரேகா சர்மா, சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். NCW-ன் இந்த செயலை வரவேற்ற சாய்னாவின் தந்தை, ''NCW இந்த பிரச்னையில் தலையிட்டது மகிழ்ச்சி, மன்னிப்புகேட்பது தான் சித்தார்த் செய்ய வேண்டிய அடிப்படை கடமை. அந்த நடிகரையும் எனக்குத் தெரியாது. நேற்றுதான் அவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்டேன்'' என்றார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Saina Nehwal

    அடுத்த செய்தி