ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என் ஜீவன் கன்னட சினிமாவில் உள்ளது, இந்தியில் பணியாற்ற மாட்டேன் - காந்தரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

என் ஜீவன் கன்னட சினிமாவில் உள்ளது, இந்தியில் பணியாற்ற மாட்டேன் - காந்தரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

என் ஜீவன் கன்னட சினிமாவில் உள்ளது. இது எனது கிராமத்தின் கதை, நான் சிறுவயதில் இருந்து பார்த்த விஷயங்கள், அதனால் தான் அதை படமாக எடுத்தேன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நான் பெருமைமிகு கன்னடியன். இந்தி படங்களில் பணிபுரிய மாட்டேன் என காந்தரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  ரிஷப் ஷெட்டி காந்தரா படத்தின் வெற்றியில் மூழ்கியிருக்கிறார். அக்ஷய் குமாரின் ராம் சேது மற்றும் அஜய் தேவ்கன்-சித்தார்த் மல்ஹோத்ராவின் தேங்க் காட் ஆகிய திரைப்படங்களின் திரைகளை இப்படம் முந்தியிருக்கிறது. காந்தாராவின் கர்ஜிக்கும் வெற்றிக்குப் பிறகு, ரிஷப் ஷெட்டி தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். அதே நேரத்தில் இந்தி படங்களில் நடிக்க மறுத்துவிட்டார்.

  பாலிவுட் பப்பிள் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நான் கன்னடத்தில் நடிக்க விரும்புகிறேன். கன்னடியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அதற்கு கன்னடத் திரையுலகினரும் கன்னட மக்களும் தான் காரணம். ஒரு படம் ஹிட் ஆவதால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன்.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  குடும்பத்தினரும் நண்பர்களும் மாற மாட்டார்கள். என் ஜீவன் கன்னட சினிமாவில் உள்ளது. இது எனது கிராமத்தின் கதை, நான் சிறுவயதில் இருந்து பார்த்த விஷயங்கள், அதனால் தான் அதை படமாக எடுத்தேன். நான் எப்போதும் மண்டலங்கள் தான் உலகளாவிய கவனத்தைப் பெறும் என்று கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bollywood