முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு: விஜய்சேதுபதிக்கு பதில் நடிக்கப் போவது யார் தெரியுமா?

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு: விஜய்சேதுபதிக்கு பதில் நடிக்கப் போவது யார் தெரியுமா?

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்கள் சாய்த்ததை நினைவுகூரும் வகையில், 800 என்ற பெயரில் திரைப்படம் எடுக்க திட்டமிடப்பட்டது. இப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானது. பின்னர் எதிர்ப்புகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் பிரிட்டன் நடிகர் தேவ் படேல் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்கள் சாய்த்ததை நினைவுகூரும் வகையில், 800 என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க முயற்சிகள் நடந்தது அனைவரும் அறிந்ததே. முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதாக முடிவானது.

அதற்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக,  நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசியம் பேசுகிறவர்களும், சில வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் ஈழப்படுகொலையை நடத்திய ராஜபக்சே அரசுக்கு ஆதரவானவர் முரளிதரன்  என்றும்அவரது வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார். விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை முன்னகர்த்த விருப்பமில்லை என படம் கைவிடப்படுவதாக முரளிதரன் அறிவித்தார். இவை 2020 இறுதியில் நடந்தன.

தேவ் படேல்

தற்போது அதே படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் பிரிட்டனைச் சேர்ந்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இவர் ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர், சாப்பி, ஹோட்டல் மும்பை, தி வெட்டிங் கெஸ்ட் உள்பட பல படங்களில் நடித்தவர். தற்போது மங்கி மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன்... என்ன கதாபாத்திரம் தெரியுமா?

First published:

Tags: Actor Vijay Sethupathi, Muthaiah muralidharan, Vijay sethupathi