ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்த் - ஜெயிலர்

ரஜினிகாந்த் - ஜெயிலர்

வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் அட்டகாச அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

' isDesktop="true" id="854451" youtubeid="DObwdl3xB7U" category="cinema">

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தில் அவர் நடிக்கும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டு, அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth, Sun pictures