Home /News /entertainment /

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் - விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் - விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

முத்தையா முரளிதரன் | விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் | விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

    133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தார் பிக்‌ஷர்ஸ் நிறுவனத்துடன் ராணா டக்குபதி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை பெருமையாகக் கருதுவதாக முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்த நிலையில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதில் தான் ஒரு அங்கமாக இருப்பது பெருமை என்றும் விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார். எனவே விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    மேலும் படிக்க: விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை வழக்கு - பதவிக்காக கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்

    முன்னதாக இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியான போது முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி