இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகையிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியுள்ள எஃப்.ஐ.ஆர் படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக என்.ஐ.ஏ அமைப்பு மேற்கொள்ளும் ஆப்ரேஷன்தான் படத்தின் மையக் கதையாக உள்ளது.
இந்தநிலையில், எஃப்.ஐ.ஆர் படத்துக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டூர்புரம் மார்கெட் அருகில் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இந்திய தேசிய முஸ்லீம் லீக் சார்பில் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம், ‘எஃப்.ஐ.ஆர் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை போல் காட்டியுள்ளது. இந்த படமானது இந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
இந்தப்படத்தில் இஸ்லாமியர்கள் ரசாயன பொருட்களை வைத்து தமிழகத்தை அளிப்பது போல் காட்டப்பட்டுள்ளது மற்றும் தவறான இஸ்லாமிய வரலாறை இதில் பதித்து உள்ளதாகவும், உடனடியாக எஃப்.ஐ.ஆர் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்கள் நீதி மய்யத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது - கமல்ஹாசன் நம்பிக்கை
சம்பந்தப்பட்ட நடிகர்கள் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிட்டவர் என அனைவருக்கும் மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. குஷ்பு போன்ற மூன்றாம் தர நடிகை எல்லாம் கருத்து கூறும் வகையில் ஹிஜாப் விவகாரம் இஸ்லாமிய சமூகத்திற்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.