ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பார்த்திபன் படத்தை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்..

பார்த்திபன் படத்தை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்..

ஏ. ஆர். ரஹ்மான்

ஏ. ஆர். ரஹ்மான்

படத்துக்குப் படம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை முயல்வது பார்த்திபனின் வழக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பார்த்திபன் இயக்கியிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார். இதனை தனது சமூகவலைத்தளத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.

படத்துக்குப் படம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை முயல்வது பார்த்திபனின் வழக்கம். பெரும்பாலும் இந்த வித்தியாசமான முயற்சிகளின் ரிசல்ட் வித்தியாசமாக இல்லாமல் ஒரேவிதமாகத்தான் இருக்கும். அதாவது பொருளாதாரரீதியாக தோல்வியடைந்திருக்கும். சினிமா விக்கிரமாதித்யனான பார்த்திபனின் விடாமுயற்சிக்கு கிடைத்த நற்பயன்தான், கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம். இந்தப் படம் நல்ல பெயரை சம்பாதித்து தந்ததுடன் ஓடவும் செய்தது. அதன் பிறகு எடுத்தப் படம் ப்ளாப். ஆனாலும், மனம் தளராமல் தான் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை எடுத்தார். பாராட்டுகள் கிடைத்தன. தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்

இந்தப் படத்தின் விசேஷம், இது சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம். பார்த்திபன் இதனை இந்தியாவின் முதல் நேர்மையான சிங்கிள் ஷாட் திரைப்படம் என்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், நேர்மையற்ற முறையில் சிலர் போலியாக சிங்கிள் ஷாட் படம் என்ற பெயரில் தங்கள் படத்தை முன்வைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

also read : நடிகை சமந்தாவின் ஆன்மிக சுற்றுலா புகைப்படங்கள்..

நிற்க. நம் விஷயத்துக்கு வருவோம். இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தைப் பார்த்த அவர் பார்த்திபனை பாராட்டியிருக்கிறார். அதனை பார்த்திபனே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

"இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். 'இது single shot  முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்.'  பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார் - வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக.."பிரளயத்துக்கு நாங்களும் தயார்.

First published:

Tags: AR Rahman, Cinema