தர்பார் படம்... சங்கத்தால் அனிருத்துக்கு வந்த சிக்கல்...!

தர்பார் படம்... சங்கத்தால் அனிருத்துக்கு வந்த சிக்கல்...!
இசையமைப்பாளர் அனிருத்
  • News18
  • Last Updated: January 5, 2020, 10:08 AM IST
  • Share this:
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு எதிராக, தமிழ்நாடு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

பேட்ட திரைப்படத்தின்போது தமிழக இசைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தர்பார் படத்திலும் அது தொடர்ந்துள்ளதாக புகார் கூறியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகின்ற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் அண்மையில் வெளியாகியிருந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இசை பணிகளின்போது தமிழக இசைக்கலைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுப்பியுள்ளார் தமிழ்நாடு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தலைவரான தீனா.


இதனால், அனிருத் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத்திடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இயங்கும் 22 சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் படத்தில் பணிபுரிய வாய்ப்பளித்த தர்பார் படக்குழுவினர், ஏன் இசைக்கலைஞர்களை மட்டும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேட்ட திரைப்படத்தின் போதும் அனிருத், தமிழக திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தை புறக்கணித்ததாக கூறை கூறியுள்ளனர். அப்போது இதுகுறித்து கேட்கையில், அடுத்த திரைப்படத்தில் தனது தவறை சரி செய்து கொள்வதாக வாக்களித்த அனிருத் தற்போது தனது வாக்குறுதியை மீறி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களில் ஹாலிவுட் இசைக்கலைஞர்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும், தமிழக இசைக் கலைஞர்கள், தங்களுக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
First published: January 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்