தளபதி 66 படம் குறித்து அதன் இசையமைப்பாளர் தமன் கொடுத்திருக்கும் அப்டேட் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
பாய்ஸ் படத்தில் ட்ரம்ஸ் வாசிப்பாளராக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் தமன். அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் அனிருத்திற்கு மார்க்கெட் எப்படி உச்சத்தில் இருக்கிறதோ, அதேபோன்ற நிலைமைதான் தெலுங்கு சினிமாவில் தமனுக்கு ஏற்பட்டுள்ளது.
பல முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களில் தமன் இடம்பெற வேண்டும் என தயாரிப்பாளர்களை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தெலுங்கு, தமிழில் உருவாகி வரும் தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்
மெலடி, கானா, வெஸ்டர்ன், இந்தியன் மியூசிக் என அனைத்து பிரிவுகளிலும் தமன் ஹிட் சாங் கொடுத்துள்ளார். தமன் இசையில் சமீபத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இதையும் படிங்க - நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
இந்நிலையில், தளபதி 66 குறித்து தமன் அப்டேட் கொடுத்துள்ளார். தான் இப்போது ஃபுல் ஃபார்மில் இருப்பதாக கூறியுள்ள தமன், தனது கெரியர்லேயே பெஸ்ட்டான ஆல்பத்தை தளபதி 66 படத்திற்கு கொடுக்கப்போவதாக உறுதி அளித்துள்ளார். சும்மாவே வெளுத்து வாங்கும் தமன், தற்போது இப்படியொரு வாக்குறுதியை அளித்திருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
விஜய் நடிக்கும் 66வது படம் இன்னும் பெயரிடப்படாமல் தளபதி 66 என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்க, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ படத்தை தயாரித்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.