ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டர் சீட்ல யாரும் உட்கார மாட்டீங்க"- இசையமைப்பாளர் எஸ்.தமன்

"ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டர் சீட்ல யாரும் உட்கார மாட்டீங்க"- இசையமைப்பாளர் எஸ்.தமன்

தமன்

தமன்

ரஞ்சிதமே பாடல் திரையரங்கில் வரும் பொழுது யாரும் அமர்ந்திருக்க மாட்டீர்கள்; இசையமைப்பாளர் எஸ்.தமன் நம்பிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு திரைப்படத்தின் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு யாரும் திரையரங்கில் அமர்ந்திருக்க மாட்டீர்கள் என இசையமைப்பாளர் எஸ்.தமன் கூறியுள்ளார்.

வம்சி பைடிபல்லி விஜய்  - கூட்டணியில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக ரஞ்சிதமே என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன், நேற்று அந்த பாடலின் வீடியோ காட்சியை பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ரஞ்சிதமே பாடல் திரையில் வரும் பொழுது திரையரங்கில் யாரும் அமர்ந்திருக்க மாட்டீர்கள் என்று கூறியுள்ளார். அதேசமயம் அந்த பதிவில் தன்னை விஜயின் ரசிகன் எனவும் அடையாளப்படுத்தியுள்ளார் தமன்.

வழமைகளை உடைக்கும் பாடல்... ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி

 வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிடலாமா என படக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். மேலும் பாடல் வெளியீட்டு விழாவை தற்போதைய நிலவரப்படி துபாயில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

பாடலைப் பார்க்க…

' isDesktop="true" id="833022" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Vijay, Entertainment