கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்ட தமன்

‘மிஸ் இந்தியா’ படத்தின் பின்னணி இசைப் பணிகள் தொடங்கிவிட்டதாக தமன் அறிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்ட தமன்
கீர்த்தி சுரேஷ்
  • Share this:
நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷின் 20-வது படமாக மிஸ் இந்தியா உருவாகி வருகிறது. ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

ஏற்கெனெவே படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் படத்தின் பின்னணி இசைப் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மிஸ் இந்தியா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான நிலையில், அவரது அடுத்த படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading