விஜயின் வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் எத்தனை பாடல்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் பாடல்கள் குறித்து தமன் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also read... 2 வருடங்களுக்கு பிறகு.. குட்டி ஸ்டோரி சொல்வாரா விஜய்? எதிர்பார்ப்பில் வாரிசு இசை வெளியீடு!
#Varisu will have 5 songs + 1 dancing bit song 🫴🏾💥. 2 songs will be released at #VarisuAudioLaunch today.. ❤️🔥#ThalapathyVijay #VarisuPongal2023pic.twitter.com/IMDo1sQrXn
— VCD (@VCDtweets) December 24, 2022
அந்த வீடியோவில் இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, வாரிசு படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் உள்ளது. முன்னதாக 3 பாடல்கள் வெளியான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மீதம் உள்ள 2 பாடல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் உள்ள 5 பாடல்களில் ஒரு பாட்டு ரசிகர்களை சீட்டில் இருந்து எழுந்து ஆடவைக்கு அளவிற்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay