ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: தீபாவளிக்கு விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்... உறுதிப்படுத்திய தமன்!

Varisu: தீபாவளிக்கு விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்... உறுதிப்படுத்திய தமன்!

விஜய் - தமன்

விஜய் - தமன்

வாரிசு படத்தின் மூலம் தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

    தென்னிந்தியாவில் பிரபலமான இசையமைப்பாளர் தமன். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தற்போது பிஸியாக இருக்கிறார். இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயனுடன் 'பிரின்ஸ்' மற்றும் 2023 பொங்கலுக்கு விஜய்யுடன் 'வரிசு' ஆகிய இரண்டு பேக் டு பேக் பண்டிகை படங்களில் பணிபுரிந்துள்ளார். நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் 'பிரின்ஸ்' படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தமன், 'வாரிசு' பற்றிய சூப்பர் அப்டேட்டையும் தெரிவித்தார்.

    அதன்படி, இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பதை உறுதி செய்தார். வம்ஷி பைடிபள்ளி இயக்கி வரும் 'வாரிசு' படத்தில் விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம் மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

    கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தா... விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு இயக்குநர் நவீன் பதில்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாரிசு படத்தின் மூலம் தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார். மேலும் அவர் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay