Home /News /entertainment /

சிந்தாந்தம் என வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள் - இயக்குநரை சாடிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்?

சிந்தாந்தம் என வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள் - இயக்குநரை சாடிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்?

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள் என மறைமுகமாக இயக்குநர் ராஜு முருகன் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டர் பதிவிட்டிருப்பது விவாதமாகியுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். தொடர்ந்து சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ப பாண்டி, மெஹெந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றினார்.

    இயக்குநர் ராஜு முருகனின் ஜோக்கர் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் ஷான். அவர் இசையில் ப பாண்டி, ஜெய்பீம் ஆகியப் படங்களில் பாடல்களை எழுதியுள்ளார் ராஜு முருகன். இந்நிலையில் ஷான் ரோல்டன் தற்போது பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு விவாதங்களை கிளப்பியுள்ளது.

    அதில், ”என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சிந்தாந்தத்தை தன் உயிர் மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சாரந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள்.

    மாஸ்-கிளாஸ் கலந்த அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்!



    ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்” என்று மறைமுகமாக ராஜு முருகனை சாடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜு முருகன் தனது அடுத்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிய உள்ளார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததன் அதிருப்தியை தான் ஷான் ரோல்டன் இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி