Home /News /entertainment /

ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்திற்கு ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன்…

ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்திற்கு ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன்…

ஆமிர்கான் மற்றும் லால் சிங் சத்தா படக்குழுவினருடன் சந்தோஷ் நாராயணன்

ஆமிர்கான் மற்றும் லால் சிங் சத்தா படக்குழுவினருடன் சந்தோஷ் நாராயணன்

லால் சிங் சத்தா படத்தில் ஆமிர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை வடிவமைத்துள்ள இந்தபடத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு ரிவ்யூ சொல்லியுள்ளார்.

    6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கெம்ப் படத்தை ரீமேக் செய்து லால் சிங் சத்தா என்ற பெயரில் ஆமிர் கான் உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

    இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகளில் ஆமிர்கான் தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

    கோவிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி

    இதையொட்டி திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஆமிர் கான் படத்துடன் இன்ஸ்டாகிராமில் ரிவ்யூ சொல்லியுள்ளார்.

    இன்ஸ்டாவில் சந்தோஷ் நாராயணன், ‘லால் சிங் சத்தாவின் வாழ்க்கையை திரையில் பார்த்து சிரித்தேன், அழுதேன், கொண்டாடினேன்… படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த உதயநிதிக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Santhosh Narayanan (@musicsanthosh)






    சந்தோஷின் பதிவைப் பார்க்கும்போது லால் சிங் சத்தா திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.

    லால் சிங் சத்தா படத்தில் ஆமிர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை வடிவமைத்துள்ள இந்தபடத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

    வேலையில்லாத சினேகன் என் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார் - நடிகை ஜெயலட்சுமி

    முன்னணி இசையமைப்பாளர் பிரித லால் சிங் சத்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தபடத்தை வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆமிர்கான் தயாரித்துள்ளார்.

    2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடிய லால் சிங் சத்தா திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan

    அடுத்த செய்தி