உயிர்வாழ பரீட்சை முக்கியமா...? திரைத்துறை பிரபலத்தின் ட்வீட்!

உயிர்வாழ பரீட்சை முக்கியமா...?  திரைத்துறை பிரபலத்தின் ட்வீட்!
விஜய் சேதுபதியுடன் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்
  • Share this:
இந்த ஆண்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதிவரும் நிலையில் சமூகவலைதளத்தில் தேர்வு குறித்து பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

புதுச்சேரியில் 14 958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முதல் முறையாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதவுள்ளனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரத்துடன் கூடுதலாக 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பது உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


மார்ச் 24-ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 24-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிப்பருவத்தை முடித்து கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவும், நல்ல மதிப்பெண்களைப் பெற்று எதிர்காலத்தை சிறப்பாக அமைக்கவும் இத்தேர்வு முடிவுகளே முக்கியம் என பெற்றோர்கள் மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரையால் மாணவர்களிடம் ஒருவிதமான பயமும், பதட்டமும் இருப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

இந்நிலையில் தேர்வு மட்டுமே மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை உணர்த்தும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டது.


அதில் “அடேய் பசங்களா... உயிர் வாழ்வதற்கு தேவையான அளவுக்கு பரீட்சை முக்கியமான விஷயம் அல்ல. ஜாலியாக எழுதுங்கடே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இக்கருத்தை ஆமோதித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: கொரோனா வந்திருச்சு... ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி டிக்டாக் வீடியோ வெளியிட்ட நடிகை....
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading