முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தமன்... வைரலாகும் படம்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தமன்... வைரலாகும் படம்!

கிறிஸ் கெயிலுடன் தமன்

கிறிஸ் கெயிலுடன் தமன்

கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த தமன் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லுடன் இசையமைப்பாளர் தமன் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் மூத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான கண்டசாலா பலராமையாவின் பேரன் தான் தமன். அவரது தந்தை கண்டசாலா சிவகுமார், இசையமைப்பாளர் கே. சக்கரவர்த்தியின் 700 திரைப்படங்களில் டிரம்ஸ் பிளேயராக பணியாற்றியிருந்தார். தமனின் தாயார், கண்டசாலா சாவித்திரி, அவரது சகோதரி யாமினி கண்டசாலா, மற்றும் அவரது அத்தை, பி. வசந்தா என அனைவரும் பின்னணி பாடகிகளாக பிரபலமானவர்கள்.

கிக் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தமன் தொடர்ந்து பல தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பணியாற்றினார். சமீபத்தில் இவரது இசையில் வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி ஆகியப் படங்கள் வெளியாகின. தற்போது இயக்குநர் ஷங்கரின் ராம்சரணின் 15-வது படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!
கிறிஸ் கெயிலுடன் தமன்

இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

இசையை தவிர, கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த தமன் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லுடன் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chris gayle, Tamil Cinema