Home /News /entertainment /

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு

வாரிசு

வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இசையமைப்பாளர் எஸ்.தமனின் புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 

    விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜய் கிளம்பும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே படத்தின் இசையமைப்பாளர் எஸ் தமன் தற்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளமான விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருக்கும் படம்வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    தமன், வாரிசு படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான பிறகு, பல அப்டேட்டுகளை அளித்து வருகிறார். அவர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்
    ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விவாகரத்துக்கு காரணம் இது தான்... மனம் திறந்த வி.ஜே.மகேஸ்வரி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வெளியிட்டு விட்ட நிலையில், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என ஊகிக்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி