ஜென்டில்மேன் படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக சினிமாவுக்கு திரும்புகிறார்.
மலையாளத்தில் மம்முட்டி, நெடுமுடிவேணு உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்துவந்த கே.டி.குஞ்சுமோன் 1991 இல் பவித்ரன் இயக்கிய வசந்தகால பறவைகள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் வெற்றிபெற, பவித்ரன் இயக்கத்தில் சூரியன் படத்தை தயாரித்தார். அதுவும் வெற்றி. பவித்ரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட, அப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கரை வைத்து ஜென்டில்மேன் படத்தை தயாரித்தார். அதன் பிறகு சிந்துநதி பூ, காதலன், ராட்சகன், காதல் தேசம் என பல படங்களை தயாரித்தார். கடைசியாக தயாரித்த படங்கள் நஷ்டமடைய, கே.டி.குஞ்சமோன் தயாரிப்பிலிருந்து விலகினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் தான் தயாரிப்பாளராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று சரியாக கணித்து சொல்கிற மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயம் பரிசளிப்பதாகவும் அறிவித்திருந்தார். அந்த இசையமைப்பாளர் மரகதமணி என்பது தெரிய வந்துள்ளது.
Also read... ரைட்டர் படத்தை வாங்கி கணக்கை தொடங்கிய ஆகா தமிழ்...!
மரகதமணி பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். தமிழில்தான் அவர் பெயர் மரகமதமணி. தெலுங்கில் கீரவாணி. ஆம், பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் இசையமைப்பாளர்தான் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்கயிருக்கிறார். இதில் வேடிக்கை, படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பெரிய பட்ஜெட் படங்களை கையாளும் திறமையுள்ள ஒருவரை தேடி வருகிறார்கள். இயக்குனர் முடிவானதும் தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து ஹீரோவை முடிவு செய்வார்களாம்.
இவர்கள் மூவரும் சேர்ந்து கதையை தயார் செய்வார்கள் என்று அதிர்ச்சி தராமல் இருந்தால் சரிதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment