Home /News /entertainment /

திருச்சியில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அறிவிப்பு!

திருச்சியில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அறிவிப்பு!

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா

இந்திய அளவில் பிரபலமான ஹரிஹரன், சாதனா சர்கம் பங்கேற்றாலும் ஹிந்திப் பாடல்கள் பாடப்படாது. தமிழ் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும் என்றும் கார்த்திக் ராஜா தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருச்சியில் அடுத்த மாதம் 24-ம் தேதி, பொன்மாலைப் பொழுது என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இளையராஜா-வின் மூத்த மகனான இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் தனது திரைப்படப் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும் என்றும், ராயல்டி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக யுவன்சங்கர் ராஜா-வின் பாடல்கள் இசைக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

    இந்திய அளவில் பிரபலமான ஹரிஹரன், சாதனா சர்கம் பங்கேற்றாலும் ஹிந்திப் பாடல்கள் பாடப்படாது. தமிழ் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும் என்றும் கார்த்திக் ராஜா தெரிவித்தார்.

    இளையராஜாவைப் போல் வெளிநாட்டு கலைஞர்களை இந்த இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்தாமல், உள்ளூரில் உள்ள கலைஞர்களை வைத்தே அதே தரத்துடன் நிகழ்ச்சியை வழங்க உள்ளதாகவும் கார்த்திக் ராஜா கூறினார்.

    Also read... சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதன் முறையாக இணையும் கீர்த்தி சுரேஷ்

    மேலும், பேட்டியின்போது பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், ரோட்டரி ஜெரால்டு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அருண், முகம்மது ரபீக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி