காப்பான் படத்தில் பாடகியாக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் மகள்!

news18
Updated: July 22, 2019, 3:13 PM IST
காப்பான் படத்தில் பாடகியாக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் மகள்!
ஹாரிஸ் ஜெயராஜ்
news18
Updated: July 22, 2019, 3:13 PM IST
காப்பான் படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ரஜினிகாந்த், மோகன்லால், இயக்குநர் சங்கர், வைரமுத்து உள்ளிட்டோருடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இசைவெளியீட்டு விழாவில் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ‘விண்ணில் விண்மீன்’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.


இசைவெளியீட்டு விழா மேடையில் தோன்றிய நிகிதாவிடம் அப்பாவின் மிகச் சிறந்த பாடல் எது என்றும் மோசமான பாடல் எது என்றும் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிகிதா, என்னுடைய அப்பா இசையமைத்த அனைத்து பாடல்களுமே சிறந்த பாடல்கள் தான் என்றார்.

இதையடுத்து தனது மகளுக்காக என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன வேணும் சொல்லு பாடலின் சில வரிகளைப் பாடினார் ஹாரிஸ் ஜெயராஜ்.

வீடியோ பார்க்க: சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...