முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.." - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்!

"எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.." - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்!

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் 2019-ல் 'காப்பான்' படத்திற்கு இசையமைத்து சிறிது இடைவெளிக்குப் பிறகு 2022-ல் 'தி லெஜண்ட்' மூலம் கம்பேக் கொடுத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். நேற்று அவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக முகநூலில் தெரிவித்திருந்தார். விரைவில் அதை மீட்டெடுப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதில் "வணக்கம் நண்பர்களே, எனது ட்விட்டர் கணக்கு கடந்த இரண்டு நாட்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளது, அதை சரிசெய்து மீட்டெடுப்போம். உங்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார் ஹாரிஸ்.

அவரின் ட்விட்டர் கணக்கு மார்ச் 10-ம் தேதி ஹேக் செய்யப்பட்டது. அவரது புரொஃபைல் பெயர் மற்றும் படம் வட்டமாக மாற்றப்பட்டு, சில பாதுகாப்பற்ற வலைத்தளங்களின் லிங்குகளுடன் ஹேக்கர்கள் சில ட்வீட்களைப் பகிர்ந்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது ஒருவழியாக ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, பல கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகாரபூர்வ கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு மீட்டெடுக்கப்படுகின்றன. சமீபத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது, பின்னர் அது மீட்டெடுக்கப்பட்டது.

வேலையைப் பொறுத்தவரை, ஹாரிஸ் ஜெயராஜ் 2019-ல் 'காப்பான்' படத்திற்கு இசையமைத்து சிறிது இடைவெளிக்குப் பிறகு 2022-ல் 'தி லெஜண்ட்' மூலம் கம்பேக் கொடுத்தார். இப்போது அவர் 'துருவ நட்சத்திரம்' வேலைகளில் பிஸியாக இருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Harris Jayaraj