முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்த வழக்கு.. வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்த வழக்கு.. வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

இசை படைப்புகளுக்கு 1.84 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசை படைப்புகளுக்கு 1.84 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு  நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி  ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக நான்கு வாரங்களில் ஜி.எஸ்.டி இணை ஆணையர்  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Gv praksh kumar, Madras High court