ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’நல்ல சம்பளம் தராங்க.. வேற மொழிக்கு போறேன்’ - ஓபனாக பேசிய பிரபல இசையமைப்பாளர்

’நல்ல சம்பளம் தராங்க.. வேற மொழிக்கு போறேன்’ - ஓபனாக பேசிய பிரபல இசையமைப்பாளர்

கோபி சுந்தர்

கோபி சுந்தர்

தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 12 படங்களுக்கு இசையமைத்து வருவதாக கோபி சுந்தர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நல்ல சம்பளம் தராங்க அதனால வேற மொழிக்கு இசையமைக்க போகிறேன் என்று மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோபி சுந்தர் மலையாளம் மற்றும் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர். இவர் தமிழில் 'யாருடா மகேஷ்', 'பெங்களூர் நாட்கள்' மற்றும் பிரபுதேவா-தமன்னா நடித்த 'தேவி' வேலன் உட்பட பல படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நட்களுக்கு முன்பு கோபி சுந்தர் தனது சமூகவலைதள பக்கத்தில் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷூடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தது சினிமா வட்டாரத்திரனிடம் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம் அம்ரிதா சுரேஷ் தமிழில் அறியப்படும் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி ஆவார். இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பிரபல நடிகர் பாலா, பாடகி அம்ருதா சுரேஷை கடந்த 2010-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். 3 வருடம் தனியாக வசித்து வந்த இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்த் கடந்த மே மாதம் பாடகி அம்ரிதா சுரேஷூம் கோபி சுந்தரும் காதலில் இருப்பதை அனைவருக்கும் அறிவித்தனர்.

Also read... WATCH:  5 கோடி பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது விஜயின் ரஞ்சிதமே பாடல்!

இந்நிலையில் தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 12 படங்களுக்கு இசையமைத்து வருவதாக கோபி சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் மலையாள படங்களில் தற்போது இசையமைப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கோபி சுந்தர் “உங்களுக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளம் கொடுப்பதாக கூறி வேறு இடத்தில் உங்களை வேலைக்கு அழைத்தால் நீங்க என்ன முடிவு எடுப்பீங்களோ அதைதான் நானும் எடுத்துள்ளேன் சகோதரரே என்று பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Music director