ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு 3-வது பாடல் குறித்து மாஸ் அப்டேட் வெளியிட்ட இசையமைப்பாளர்!

துணிவு 3-வது பாடல் குறித்து மாஸ் அப்டேட் வெளியிட்ட இசையமைப்பாளர்!

அஜித்

அஜித்

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் கடந்த 18-ம் தேதி வெளியானது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திலிருந்து மூன்றாவது பாடலாக கேங்ஸ்டா வெளியாகவுள்ளதாக் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.

துணிவு படத்தில் அஜித் மற்றும்மஞ்சு வாரியருடன், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Also read... தப்ப உணரனும்... தனலட்சுமிக்கு அட்வைஸ் பன்னபோய் கடுப்பான கதிரவன்!

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் கடந்த 18-ம் தேதி வெளியானது. அஜித் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். இதுவரை யூடியூப்பில் சில்லா சில்லா பாடல் 21 மில்லியன் பார்வைகளையும், காசேதான் கடவுளடா பாடல் 6 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் மூன்றாவது பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். கேங்ஸ்டா என்ற பாடலை ஷபீர் பாட வெளியாகவுள்ளதாக அந்த ட்வீட் மூலம் தெரிகிறது. இரண்டாவது பாடல் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் மூன்றாவது பாடலின் வெளியீட்டு தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith