ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற டி.இமான்

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற டி.இமான்

டி.இமான்

டி.இமான்

இசைக் கலைத் துறையில் கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி!

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இசையமைப்பாளர் டி.இமானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

  தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் செய்த பங்களிப்பினால், பல விருதுகளைப் பெற்றுள்ளனர். அதோடு சினிமாத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பலர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

  அவர் அக்டோபர் 20, 2022 அன்று கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றார். டாக்டர் பட்டம் பெற்ற சான்றிதழின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த டி.இமான், "சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் (இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது) இசைக் கலைத் துறையில் கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி! அன்பும் வாழ்த்துகளும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

  இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அருண்ராஜா காமராஜ்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையில், சசிகுமார் நடித்துள்ள 'காரி' மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் 'வள்ளி மயில்' ஆகியப் படங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறார் டி.இமான்.

  Published by:Shalini C
  First published:

  Tags: D.imman