Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம்!

சிவகார்த்திகேயன்

டான், அயலான் படங்களைத் தொடர்ந்து அசோக் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

  • Share this:
    சிவகார்த்திகேய் டான், அயலான் என இரு படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    சிவகார்த்திகேயன் படம் என்றால் பெரும்பாலும் இசை அனிருத்தாகவே இருக்கும். அதையும் மீறி சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்தி செய்த ஒருவர் உண்டென்றால், அது டி.இமான். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இமான் இசையில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் மறக்க முடியாத பாடல். ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய சிவகார்த்திகேயன் படங்களுக்கும் டி.இமானே இசை. அவரது இசையில் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியிருப்பதுடன், பாடவும் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டான், அயலான் படங்களைத் தொடர்ந்து அசோக் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அசோக் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்தப் புதிய படத்துக்கு சிங்கப்பாதை என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக டி.இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    படத்தின் நாயகி யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் போன்றவற்றை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: