ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"என்னுடைய எல்லா கச்சேரிகளுக்கும் இந்த கிளி வேண்டும்.." மல்லிப்பூ பாடலுக்கு டான்ஸ் ஆடிய கிளி வீடியோவை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்!

"என்னுடைய எல்லா கச்சேரிகளுக்கும் இந்த கிளி வேண்டும்.." மல்லிப்பூ பாடலுக்கு டான்ஸ் ஆடிய கிளி வீடியோவை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்!

ஏ ஆர் ரகுமான்

ஏ ஆர் ரகுமான்

வெந்து தணிந்தது காடு படத்தில் கவிஞர் தாமரை எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியான மல்லிப்பூ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து  மல்லிப்பூ பாடலுக்கு கிளி ஒன்று டான்ஸ் ஆடிய வீடியோவை ஏ ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. மொத்தம் 2 பாகங்களைக் கொண்டதாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் கிராமத்திலிருந்து மும்பைக்கு செல்லும் முத்து வீரனான சிம்பு, மும்பையில் எப்படி தாதா ஆகிறார் என்பது விவரிக்கப்பட்டிருக்கும். அடுத்த பாகத்தில் சிம்புவின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் கவிஞர் தாமரை எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியான மல்லிப்பூ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்திலேயே தனக்கு மிகவும் விருப்பமான பாடல் இதுதான் என்றும் சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் வெளியூரில் நீண்ட நாட்களாக இருக்கும் தனது கணவனை நினைத்து, மனைவி பாடும் பாடலாக மல்லிப்பூ அமைந்திருக்கும். இதில் சிம்பு ஆடும் காட்சி மிகவும் ரசிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானோரால் ரீல்ஸ் செய்யப்பட்டிருந்தது.
 
View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)இந்நிலையில் இந்தப் பாடலுக்கு கிளி ஒன்று நடனம் ஆடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதனை நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ”என்னுடைய எல்லா கச்சேரிகளுக்கும் இந்த கிளி வேண்டும், இந்த நடனமும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Also read... 1980 முதல் 2007 வரை... ஏவிஎம் நிறுவனமும், ரஜினியும் இணைந்து செய்த சாதனைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: A.R.Rahman