தர்பார் படத்தின் இசை வெளியீட்டு தேதி, இந்தியன் 2 அப்டேட்... அனிருத் சொன்ன புதிய தகவல்

போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. 

news18
Updated: August 19, 2019, 7:58 AM IST
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு தேதி, இந்தியன் 2 அப்டேட்... அனிருத் சொன்ன புதிய தகவல்
போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. 
news18
Updated: August 19, 2019, 7:58 AM IST
தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று இசைமைப்பாளர் அனிரூத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார்.இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் அனிரூத், ‘தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தர்பார் படப்பிடிப்புக்கு பிறகு இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அனிரூத் தெரிவித்துள்ளார்

Loading...

 

Also watch

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...