Home /News /entertainment /

அனிருத் இசையமைக்கும் 25வது படம்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அனிருத் இசையமைக்கும் 25வது படம்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

3 படத்தில் கடந்த 2012-ல் அறிமுகம் ஆன அனிருத் தொடர்ந்து எதிர்நீச்சர், கத்தி, மாரி, நானும் ரவுடிதான், வேதாளம், விவேகம், தானா சேர்ந்த கூட்டம், பேட்ட, தர்பார் என மிகக்குறுகிய காலத்தில் ஏராளமான ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்துள்ளார்.

    அனிருத் இசையமைக்கும் 25-வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இன்றைய தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்ட்டட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். மீடியம் பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனிருத் கை வைத்த அனைத்துமே ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளன. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

    இதைத் தவிர்த்து, பின்னணி பாடகராகவும் அனிருத் தொடர்ந்து கலக்கி வருகிறார். 5 பாடல்கள் இடம்பெறும் படங்களில் குறைந்தது 2-3 பாடல்களை அனிருத் உறுதியாக ஹிட் கொடுத்து விடுகிறார். பின்னணி இசையும் படத்திற்கு படம் தாறுமாறாக அமைத்து வருவதால், தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோக்களின் ப்ராமிஸிங் இசையமைப்பாளராக உள்ளார் அனிருத்.

    3 படத்தில் கடந்த 2012-ல் அறிமுகம் ஆன அனிருத் தொடர்ந்து எதிர்நீச்சர், கத்தி, மாரி, நானும் ரவுடிதான், வேதாளம், விவேகம், தானா சேர்ந்த கூட்டம், பேட்ட, தர்பார் என மிகக்குறுகிய காலத்தில் ஏராளமான ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்துள்ளார்.

    இந்தாண்டு டான், பீஸ்ட், விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் லைனில் உள்ளன. இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் அவர் இசையமைக்கும் 25-வது படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் படங்களைக் கொடுத்த விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

    விருதுளைப் பொருத்தவரையில், அனிருத் பிலிம் பேர், விஜய், சைமா, எடிசன் என பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். 31 வயதாகும் அனிருத், மிகக் குறுகிய கால கட்டத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். தற்போது தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளுககு அனிருத் ராஜ்ஜியம்தான் நடக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Anirudh

    அடுத்த செய்தி