ஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் 'சினம்' பட வேலைகள்!

ஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் 'சினம்' பட வேலைகள்!
சினம் படக்குழு
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சினம் படத்தின் பாடல்கள் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

அரசின் இந்த நடவடிக்கையால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அதேவேளையில் அரசின் உத்தரவை மீறாமல் சிலர் வீட்டிலிருந்தபடியே தங்களது பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு வருகின்றனர்.


அந்தவகையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் சினம் படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பு பணி வீட்டிலிருந்தபடியே கான்பிரன்ஸ் கால் மூலம் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை இயக்குநர் குமரவேலன் இயக்குகிறார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைபப்டத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் பாலக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயகுமார் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு சபிர் இசையமைக்கிறார்.மேலும் படிக்க: பிரதமரின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நிராகரிக்கிறேன் - கரு.பழனியப்பன்First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading