முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''அழகிய சிலை போல இசை.. தேவையற்றதை நீக்குங்கள்'' - நல்ல பாடலுக்கு டிப்ஸ் கொடுத்த இளையராஜா!

''அழகிய சிலை போல இசை.. தேவையற்றதை நீக்குங்கள்'' - நல்ல பாடலுக்கு டிப்ஸ் கொடுத்த இளையராஜா!

இளையராஜா

இளையராஜா

ஒரு சிற்பி தேவையில்லாத பகுதியை நீக்கினால் மட்டுமே அழகிய சிலையை வடிவமைக்க முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளர் தேவையில்லாத ஒலிகளை நீக்க வேண்டும் என இளையராஜா தெரிவித்துள்ளார்.  34-வது அகில இந்திய மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கலாச்சார கலைக்கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கத்தில் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

விழாவில் பேசிய இளையராஜா, தேவையற்ற ஒலிகளை ஒதுக்குவது நல்லது. ஒரு சிற்பி தேவையில்லாத பகுதியை நீக்கினால் மட்டுமே அழகிய சிலையை வடிவமைக்க முடியும். அதே போல ஒரு இசையமைப்பாளர் தேவையில்லாத ஒலிகளை நீக்கிவிட்டு சரியான பாடலை வடிவமைத்தால் மக்கள் ரசிப்பார்கள், நல்ல பாடல் கிடைக்கும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ilaiyaraja