Home /News /entertainment /

ஜெயம் ரவி – நயன்தாரா படத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்…

ஜெயம் ரவி – நயன்தாரா படத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்…

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

உதயநிதி நடித்த மனிதன் படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ஹாரிஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமா இசையுலகில் கொடிகட்டிப் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த சில ஆண்டுகளாக பிரேக் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜெண்ட் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

    இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாகியுள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பாடல்கள் நன்றாக ரீச் ஆனதால் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அண்ணா - உதயநிதி குறித்து சிம்பு வெளியிட்ட ட்வீட்! 

    இந்நிலையில் ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில், ஐ. அகமது இயக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசியாக ஐ. அகமது இயக்கத்தில் வெளிவந்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

    இந்த படத்திற்கு இறைவன் என்பதை ஒர்க்கிங் டைட்டிலாக படக்குழுவினர் வைத்துள்ளனர். ஆக்சன் த்ரில்லராக இறைவன் படம் உருவாகி வருகிறது.

    இதையும் படிங்க - நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா!

    கடைசியாக உதயநிதி நடித்த மனிதன் படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன்,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதற்கிடையே இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Jayam Ravi, Harris Jayaraj, Nayanthara

    அடுத்த செய்தி