சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகப்படுத்தும் இமான்!

சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகப்படுத்தும் இமான்!
இசையமைப்பாளர் டி.இமான்
  • News18
  • Last Updated: October 10, 2019, 3:04 PM IST
  • Share this:
பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

றெக்க படத்தின் இயக்குநர் ரதன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகும் படம் சீறு. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பி ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்கிறார் இமான். இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் டி.இமான், “சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.


வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading