Home /News /entertainment /

ஆல்ரவுண்டராக கலக்கும் இசை ரசிகர்களின் விஸ்வாச இசையமைப்பாளர் டி.இமான்...

ஆல்ரவுண்டராக கலக்கும் இசை ரசிகர்களின் விஸ்வாச இசையமைப்பாளர் டி.இமான்...

விஸ்வாசம் திரைப்படத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலில் இசைதாலாட்டி ஒட்டுமொத்த “அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” செய்தார் இமான்.

விஸ்வாசம் திரைப்படத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலில் இசைதாலாட்டி ஒட்டுமொத்த “அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” செய்தார் இமான்.

விஸ்வாசம் திரைப்படத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலில் இசைதாலாட்டி ஒட்டுமொத்த “அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” செய்தார் இமான்.

  தமிழ் சினிமாவின் இசை ராஜ்ஜியத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இசை ரசிகர்களின் விஸ்வாச இசையமைப்பாளர் டி.இமான். அவரைப் பற்றி ஒரு தொகுப்பை தற்போது குட்டி ஸ்டோரியில் காணலாம்.

  தமிழ் சினிமாவின் இசை ராஜ்ஜியத்தில் காலத்திற்கு காலம் ஒரு இசையமைப்பாளர் காட்டில் அடை மழை பெய்யும். இப்போதான காலத்தில் அப்படியான அடைமழை பெய்யும் இசை மழை டி.இமான். விஜய் நடித்த ’தமிழன்’ திரைப்படத்தில் அறிமுகமான இமான் அதன்பின் ’விசில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கிறுக்கா காதல் கிறுக்கா’ மற்றும் ‘அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா’ பாடலின் மூலம் கேட்பவர்களை விசில் அடிக்க செய்து தமிழ் மக்களிடம் அறியப்பட்டார்.

  இதையும் படிங்க : த்ரிஷாவை உத்திரபிரதேச போலீசாக்கிய அரசியல் கட்சியினர்...!

  முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் பல இன்னிசை பாடல்களை கொடுக்க ஆரம்பித்தார் இமான். ஆணை .. வாத்தியார் தலைநகரம் கோவை பிரதர்ஸ் திருவிளையாடல் ஆரம்பம் மருதமலை கச்சேரி ஆரம்பம் என 2010 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இசை கச்சேரி செய்த இமானை , அப்படியே வேறொரு பரிமாணத்திற்கு பறக்க செய்தது “மைனா”. அதுவரை பாடல்களுக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த இமான், முதல் முறையாக பின்னணி இசையின் மூலம் தன்னை தமிழ் சினிமாவிற்கு அடையாளப் படுத்திக் கொண்டார் இந்த ‘மைனா’ திரைப்படத்தில்.

  மைனாவிற்கு பிறகு இமானின் இசை வடிவம் வேறாக மாறி மாஸ்…கிளாஸ் என சமமாக பயணித்து அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்தது. இதன் தொடர்சியாக ’மனம் கொத்திப் பறவை’ திரைப்படத்தில் ’ஜல் ஜல் ஜல் ஓசை’ பாடல் இசை ரசிகர்களை ராவாகி போனாலே கண்ணுமுழி தூங்க விடாமல் செய்ததோடு…... ’ கும்கி’ திரைப்படத்தின் ’ ஒன்னும் புரியல சொல்ல தெரியல’ பாடல் அலையிற பேயா தாக்கி சென்றதோடு…. ’தேசிங்கு ராஜா’ வின் ‘அம்மாடி அம்மாடி’ பாடல் கேட்போரை திரும்ப திரும்ப கேட்க வைத்தது.

  இதையும் படிங்க : மியூஸிக் வீடியோ வேலைகளை தொடங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...!

  நீண்ட நாட்களுக்கு பின் அனைவரையும் இமானின் ஒரு பாடல் முனுமுணுக்க வைத்து ஸ்டெப் போட வைத்தது. அப்பாடல்தான் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற . ’ஊதா கலரு ரிப்பன்’ இப்பாடலை தமிழகமே முனுமுனுத்து சலாம் போட்டது. இதோடு அப்படத்தில் இடம்பெர்ற ‘பாக்காத பாக்காத’பாடல் மெல்லிய காதல் கீதமும் வாசித்தது. அதுமட்டுமல்லாமல் ஜில்லாவில் கண்டாங்கியில் கலக்கியெடுத்த இமான் பாண்டிய நாட்டி;ல் ’ஃபை ஃபை ஃபை கலாய்ச்சு ஃபை’ பாடலில் ஒட்டுமொத்த இளம் பெண்களை வானிலிருந்து கையை பூமிக்கு இறக்கி ஆட செய்தார் இமான்.

  தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பாடலால் அனைவரையும் திரும்பி பார்க்க திரும்பி கேட்க செய்த இமான் ’ஜீவா’ திரைப்படத்தில் ’ஒருத்தி மேலே மையல்’ ஆன பாடலில் வித்தியாச வெஸ்டர்ன் வாசித்த இமான் கயல் திரைப்படத்தில் ’உன்ன இப்போ பாக்கணும்’ பாடல் கொடுத்து பார்க்காமல் இருக்கும் காதலர்களின் கலைஞன் ஆனார்.

  'கண்ணம்மா கண்ணம்மா’ என இசை ரசிகர்களின் ராத்திரிகளை செம்பருத்தி பூவை போல ஸ்னேகமான ராத்திரிகளாக்கிய இமான் அதன்பின் கடைக்குட்டி சிங்கம் சீமராஜா நம்ம வீட்டுப் பிள்ளை என இசை ராஜாங்கம் நடத்தி விஸ்வாசம் திரைப்படத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலில் இசைதாலாட்டி ஒட்டுமொத்த “அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” செய்தார். இப்படியான இமானின் இசை உலக பயணம் சொல்லாமல் சொன்ன இசை குறிப்பு ’இசை மிருதன் இமான்’ என்பது.
  First published:

  Tags: D.imman

  அடுத்த செய்தி