முதலிரவு சமாச்சாரம் பேசும் ‘முருங்கைகாய்’ சிப்ஸ் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது

முதலிரவு சமாச்சாரம் பேசும் ‘முருங்கைகாய்’ சிப்ஸ் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
முருங்கைகாய் சிப்ஸ் ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் ஷாந்தனு அந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். கொரோனா பிரச்னை முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ஷாந்தனு நடிப்பில் உருவாகும் ராவணக்கோட்டம் படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இந்தப் படங்களை அடுத்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் ஷாந்தனு. அவருக்கு ஜோடியாக அதுல்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடிக்கிறார்.இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக விரசமில்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டு இந்தப் படம் உருவாகிறது. ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தரண், ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading