ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

தயாரிப்பாளர் முரளிதரன்

தயாரிப்பாளர் முரளிதரன்

ஏற்கனவே அவருக்கு இருதய கோளாறு இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் மரணம் அடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.

தமிழ் சினிமாவில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் இணைந்து பல்வேறு பிரபல திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, அஜித்தின் உன்னைத்தேடி, சூர்யாவின் உன்னை நினைத்து, கார்த்திக் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியடைந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட 28 திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.

இதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் முரளிதரன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அப்போது மலை படி ஏறும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

ஏற்கனவே அவருக்கு இருதய கோளாறு இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் மரணம் அடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema