மணி ஹெய்ஸ்ட் 5 தீம் மியூசிக்கை இசைத்த மும்பை போலீசின் காக்கி பேண்ட் குழுவினர்!

மணி ஹெய்ஸ்ட்

இந்த சீரிஸ் மீது கடுமையான விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

 • Share this:
  மணிஹெய்ஸ்ட் சீரிஸின் 5வது பாகத்தில் வரும் bella-ciao பாடலுக்கு மும்பை காவல்துறையின் பேண்ட் குழுவினர் இசைக்கும் வீடியோ இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

  கொரோனா காலத்தில் வெளியான வெப் சீரிஸ்களில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற தொடர் மணி ஹெய்ட். ஏற்கனவே 4 பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை குவித்துள்ளது எனலாம். இந்தியா மட்டும்மல்லாது உலகளவில் மிகப்பெரிய வெற்றித் தொடராக அமைந்துள்ள மணி ஹெய்ஸ்ட், கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கது. பரபரப்புக்கும், டிவிஸ்டுகளுக்கும் பஞ்சம் வைக்கமால், ஒரே ஜோராக இறுதி வரை செல்கிறது. ஒரு முறை மணி ஹெய்ஸ்ட் தொடரை பார்த்தவர்கள், நிச்சயம் அடுத்தடுத்த சீரிஸையும் பார்த்துவிடுவார்கள்.

  அதனால் என்னவோ, 5வது சீரிஸ் எப்போது வெளியாகும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்து படைக்கும் வகையில், தற்போது 5வது சீசனின் முதல் வால்யூம் வெளியாகியிருக்கிறது. மக்களிடையே இருந்த ஆர்வத்தை குலைக்கும் வகையில் சிறிய செக்மெண்ட் கூட இல்லாமல், இந்த சீரிஸிலும் விருந்து படைத்திருக்கிறார்கள்.

  அங்கங்கே படபடப்பையும் கூட்டியிருகிறார்கள். குறிப்பாக, ஆர்த்ரோ இந்த சீரிஸில் வெறிக்கொண்டு விளையாடியிருக்கிறார். அவரது நடிப்பை பாராட்டாமல் இருப்பவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஆர்த்ரோ சிறப்பாக நடித்திருக்கிறார். இதனால், வழக்கம்போல் இந்த சீரிஸையும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மணி ஹெய்ஸ்டின் இந்த அலையில் மும்பை காவல்துறையும் சிக்கியிருக்கிறது.  மணி ஹெய்ஸ்ட் சீசன் 5, முதல் வால்யூமில் வரும் bella-ciao பாடலுக்கு மும்பை காவல்துறையினர் பேண்ட் இசைத்து, அதனை தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். #for_safety என்ற ஹேஸ்டேக்கின் கீழ் காக்கி ஸ்டுடியோ என வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், காவல்துறையினர் குழுவாக பெலா சியாயோ பாடலுக்கு பேண்ட் வாசிக்கின்றனர். காவல்துறையினர் இந்த செயல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  அந்த வீடியோவுக்கு காவல்துறையினர் பதிவிட்டுள்ள கேப்சனில், கண்டுபிடிப்புகள் மற்றும் டிரெண்டுகளை நாங்கள் ஒருபோதும் தவறவிடமாட்டோம் என கூறியுள்ளனர். மேலும், பாதுகாப்பு வழங்குவதை முடிக்க நீங்கள் போட்டியிடுகிறீர்கள், ஆனால் நாங்கள் விடமாட்டோம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

  அதேநேரத்தில், இந்த சீரிஸ் மீது கடுமையான விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர். பரபரப்பை கூட்டுவதற்காகவே சில காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் மிகைப்படுத்தப்பட்டதுபோல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெர்லினின் கதை வெறும் பிளாஷ் பேக்கா, இல்லை அதன் தொடர்ச்சி, மெயின் கதையில் இணையுமா என்பதை சொல்லாமலே முடித்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளனர். இந்த சீசனில் இருக்கும் தவறுகள் அல்லது குறைபாடுகள் அடுத்த சீசனில் இல்லாமல் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என விமர்சகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: